பள்ளி மாணவர்கள் பலமாக தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் மரணம்!!!

 

பள்ளி மாணவர்கள் பலமாக தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் மரணம்!!!

மூன்று மாணவர்கள் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அம்மாணவர்கள் வந்த அந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீதி மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இரு சக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லக் கூடாது என்று எத்தனை விதிகள் இருந்தாலும், அதனை யாரும் பின்பற்றுவதில்லை. இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி செல்வது மற்றும் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்வது போன்ற செயல்கள் பள்ளி மாணவர்களிடையே ட்ரெண்ட் ஆக மாறி விட்டது. அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் உயிர் சேதத்தை அவர்கள் அறிவதில்லை.  

Death

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மூன்று மாணவர்கள் ஒன்றாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அம்மாணவர்கள் வந்த அந்த இரு சக்கர வாகனம் எதிரே வந்த ஆட்டோ மீதி மோதியது. இதில் ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இதில், அந்த மாணவர்கள் மூவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை பலமாக தாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்து தப்பி செல்ல 3 மாணவர்களில் ஒருவர் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு சென்றுள்ளார். மீதம் உள்ள இருவரும் அவர்களின் இரு சக்கர வாகனத்தில் தப்பியோடி உள்ளனர். 

இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் திலீப்குமார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ஆனால் மாணவர்களின் தாக்குதல் பலமாக இருந்ததால் திலீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திலீப் குமாரை தாக்கிய மாணவர்கள் மேல் அவரது மனைவி பிரியா காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மாணவர்கள் மீது எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்களை விசாரித்து வருகின்றனர்.