பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் -குடிவெறியில் ஏற்பட்ட பணவெறி 

 

பள்ளி மாணவன் பணத்துக்காக கடத்தல் -குடிவெறியில் ஏற்பட்ட பணவெறி 

பெற்றோரிடமிருந்து பணம் கறக்கும் நோக்கில் பள்ளி மாணவனை காரில் கடத்திய 28 வயது இளைஞரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

பெற்றோரிடமிருந்து பணம் கறக்கும் நோக்கில் பள்ளி மாணவனை காரில் கடத்திய 28 வயது இளைஞரை ராஜமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

culprit

ஆர் லோகேஸ்வரன் என்ற 28 வயது வாலிபர்  சென்னை சூரபேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்  10 ஆம் வகுப்பு மாணவரை கடத்தினார் . வில்லிவக்கத்தில் உள்ள ராஜாஜி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த வி சஞ்சய் (14) திங்கள்கிழமை அருகில் உள்ள பள்ளிக்கு  சென்றிருந்தார். இரவு 7 மணிக்குப் பிறகும் அவர் வீடு திரும்பாதபோது, ரயில்வே ஊழியரான அவரது தந்தை வினோத்குமார் மகனை பற்றி பள்ளியில்  விசாரித்தபோது , மாலை 6.30 மணியளவில் சஞ்சய் பள்ளியிலிருந்து வீட்டுக்கு போய்விட்டார்  என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அருகில் உள்ள பகுதியில்  தேடிய பின்னர் வினோத்குமார் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

police

இதற்கிடையில், சிலர்  சஞ்சய்   சூரபேட்டிலுள்ள  காவல் நிலையத்திற்கு வழிகேட்டதை  கவனித்து விசாரித்தபோது, அவர் கடத்தப்பட்டதாக அவர்களிடம் கூறினார். பொதுமக்கள் அவரை அம்பத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவலின் பேரில், ராஜமங்கலம் போலீசார் அவருடன் விசாரணை நடத்தியபோது, திங்கள்கிழமை மாலை தான் ஒருவரால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால் அவர் செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து தப்பியதாக கூறினார் 

kidnapp

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் அவர்  அம்பத்தூரில் உள்ள சண்முகபுரத்தில் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த ஆர்.லோகேஷ்வரன் (28) என கணடறிந்தனர் . இவர் கார் டிரைவர். விசாரணையில் லோகேஸ்வரன் சஞ்சயை நண்பரின் காரில் மது போதையில்  பெசன்ட் நகருக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. பிறகு , அதிகாலை 2.30 மணியளவில் சஞ்சயை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து, அவரை விடுவிக்க சஞ்சயின் தந்தையிடமிருந்து பணம்  கேக்கப்  போவதாகக் கூறினார். இருப்பினும், சஞ்சய் அவரிடமிருந்து தப்பித்து வந்தார் 
லோகேஸ்வரனை கடத்தல் குற்றச்சாட்டில் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைத்தனர்.