பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்! 

 

பள்ளி பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி 5ம் வகுப்பு பாட புத்தகத்தின்  இடம்பெற்றுள்ளது அவர்  ரசிகர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி 5ம் வகுப்பு பாட புத்தகத்தின்  இடம்பெற்றுள்ளது அவர் ரசிகர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தனது பஞ்ச் டயலாக்ஸ் மற்றும் தனது ஸ்டைலியின் மூலம் நாடு முழுவதும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவைத்துள்ளார். 

இந்நிலையில் இவரின் கடின உழைப்பையும், வெற்றியையும்,  குழந்தைகள் தெரிந்துகொள்ளும் வகையில்,  5ம் வகுப்பு பாட புத்தகத்தின் பொது அறிவுக்கான ‘ரேக்ஸ் டூ ரிச் ஸ்டோரீஸ்’ பாடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்வி இடம் பெற்றுள்ளது. 

அந்த கேள்வியில், வறுமையில் வாடி, தங்களது கடின உழைப்பு விடா முயற்சியால் பணக்காரர்களாகவும், புகழ் மிக்கவர்களைப் பற்றி போடப்பட்டுள்ளது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. சாதாரண கார்பெட்ண்டரில் இருந்து பஸ் கண்டக்டராகி பின் திரைத்துறையில் சாதித்தார் என்று போடப்பட்டுள்ளது. மேலும் ரஜினிகாந்த்தைத் தவிர சார்லின் சாப்ளின்,  ஸ்டீவ் ஜாப், மற்றும் பலர் அதில் இடம் பெற்றுள்ளனர்.