பள்ளி குழந்தையாக மாறி செம லூட்டி அடித்த சாண்டி 

 

பள்ளி குழந்தையாக மாறி செம லூட்டி அடித்த சாண்டி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் தொடங்கி 58 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இது வரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, ரேஷ்மா, சரவணன், மதுமிதா, சாக்ஷி அகர்வால் மற்றும் அபிராமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த வார நாமினேஷனில் சாண்டி, தர்ஷன், கஸ்தூரி மற்றும் சேரன் ஆகியோர் உள்ளனர். 

இந்த வாரத்திற்கான luxury பட்ஜெட் டாஸ்க்காக ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் குழந்தைகள் போல் மாறியுள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர்களாக கஸ்தூரி மற்றும் சேரன் உள்ளனர். அதைத்தொடர்ந்து இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.அதில் நேற்றைய தொடர்ச்சியாகப் பள்ளிக்கூடம் டாஸ்க் மீண்டும் தொடர்வது போல் உள்ளது. இன்றைக்கான டாஸ்கில் ஷெரின், லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் வந்து tongue ட்விஸ்ட்டர் கேம் விளையாடுவது போல் உள்ளது. 

வழக்கம் போல் வனிதா இந்த டாஸ்கில் தனக்கு கொஞ்சம் கோபம் வருகிறது என்று கூறுவது போல் புரோமோ முடிக்கப்பட்டுள்ளது.