பள்ளி குழந்தைகளுக்கு கோழி குஞ்சுகள்! அரசின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்! 

பள்ளி குழந்தைகளுக்கு கோழி குஞ்சுகள்! அரசின் புது முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்! 

மூன்று மாத குழந்தையிலிருந்து எழுபது வயது பெரியவர்கள் வரையில் எல்லோர் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தவழ்கிறது. செல்போன்களின் இந்த வளர்ச்சி ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கும், அத்தியாவசியமான தகவல் தொடர்புகளுக்கும் மட்டுமே பயன்படாமல், குழந்தைகளும், மாணவர்களும் ஒரு கட்டத்தில் செல்போன்களுக்கு அடிமையாகவே ஆகிவிடுகிறார்கள். நாளடைவில் இதிலிருந்து குழந்தைகளை மீட்பதற்கு பெற்றோர்கள் அவதிபடுகிறார்கள். 

இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நூதனமான திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு.

chick

அதன்படி, அரசு சார்ப்பில் மழலையர் பள்ளிகளில் ஆரம்பித்து உயர்நிலைப் பள்ளியிலும் பயிலும் மாணவர்கள் வரையில் அவர்களுக்கு கோழி குஞ்சுகளைக் கொடுத்து, வளர்க்கச் சொல்கிறார்கள். இது வரையில் இப்படி மாணவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 2 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. செல்போன்களில் நேரம் முழுவதையும் செலவிட்டு, அதற்கு அடிமையாவதற்கு பதிலாக இந்த கோழி குஞ்சுகளை வளர்த்து, அதனுடன் நேரம் செலவிடுவதால் மன அழுத்தமும் குறைவதாக ஆய்வு செய்திருக்கிறார்கள். அரசின் இந்த புதிய திட்டத்திற்கு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை இது போன்ற ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்குகளில் தற்சமயம் ஈடுபட வைத்துள்ளனர்.