பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் நிலை இனிமேல் வராது : அமைச்சர் செங்கோட்டையன்

 

பள்ளி கழிப்பறையை மாணவர்கள் சுத்தம் செய்யும் நிலை இனிமேல் வராது : அமைச்சர் செங்கோட்டையன்

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களே கழிவறையைச் சுத்தம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களே கழிவறையைச் சுத்தம் செய்யும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் சிறுபான்மையின மாணவர்களையே அதனைச் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரச்சலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் இனிமேல் கழிவறையைச் சுத்தம் செய்யும் நிலை வராது. சிறுபான்மையின மக்களுக்காக அரசு பல திட்டங்களை இயக்கி வருகிறது என்றும் தெரிவித்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு முறைகேடு புகார் குறித்துப் பேசிய அவர், முறைகேடு நடந்துள்ளதாக உரிய ஆதாரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், பெண்களின் நலனுக்காக  ரூ.78 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் பெண் ஆசிரியர்களே நியமனம் செய்யப் பட்டிருப்பதால் தேர்வெழுதும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.