பள்ளிவாசலில் தொழுகை தொடங்கியதால் பிரச்சாரத்தை நிறுத்திய கனிமொழி!

 

பள்ளிவாசலில் தொழுகை தொடங்கியதால் பிரச்சாரத்தை நிறுத்திய கனிமொழி!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பள்ளிவாசலில் தொழுகை தொடங்கியதை அடுத்து ஐந்து நிமிடங்களில் பிரச்சாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

முதுகுளத்தூரில் திமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்கள் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் திறந்தவெளி வாகனத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள பள்ளிவாசலில் இருந்து தொழுகைகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஐந்து நிமிடம் கனிமொழி தனது பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு அமைதியாக வாகனத்தில் நிண்டு கொண்டு பின்னர் தொண்டர்களுக்கு கைகொடுத்தார்.

பள்ளிவாசலில் தொழுகை தொடங்கியதால் பிரச்சாரத்தை நிறுத்திய கனிமொழி!

அதன்பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்பி, “முதுகெலும்பில்லாத அரசாக இந்த அரசு இருக்கிறது. முதலமைச்சர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டுமென்றால் கூட டெல்லியில் கேட்டுத்தான் கொடுக்கிறார். கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு முன்பு டாஸ்மாக்கை திறந்துவிட்டார்கள். வெற்றி நடைபோடும் தமிழகம் என்று முதலமைச்சர் விளம்பரம் செய்து வருகிறார். ஆனால் டாஸ்மாக்கில் தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது” என்று பேசினார்.