பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

 

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ட்வீட்!

பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், முதல் கட்ட தடுப்பு நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. தொடர்ந்து ஒரு மாதத்திற்கு பள்ளிகள் மேலாக மூடப்பட்டுள்ளதால், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் வீட்டிலேயே இருந்து இ-புத்தகம் மூலமாக படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பள்ளிகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. 

ttn

இந்நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும்.தமிழக அரசைப் பொறுத்த வரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.