பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! – பா.ஜ.க அமைச்சர் சொல்கிறார்

 

பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! – பா.ஜ.க அமைச்சர் சொல்கிறார்

மத்திய அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ளவர் கிரிராஜ் சிங். இவர் சமீபத்தில் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பகவத் கீதையை பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும்.

பள்ளிகளிலேயே பகவத் கீதையை ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ளவர் கிரிராஜ் சிங். இவர் சமீபத்தில் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பகவத் கீதையை பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். நம்முடைய குழந்தைகளை மிஷனரிகள் (கிறிஸ்தவர்கள்) நடத்தும் பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்கள் ஐஐடியில் இடம் கிடைத்து பொறியாளர்கள் ஆகிவிடுகின்றனர். பிறகு வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகின்றனர். அங்கு மாட்டிறைச்சி சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர். ஏன் இப்படி நடக்கிறது? நாம் நம்முடைய கலாச்சாரத்தையும் பாரம்பரிய மதிப்பீடுகளையும் கற்றுக்கொடுக்காததுதான் காரணம்” என்று கூறியதாக தெரிவித்துள்ளனர். அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.