பள்ளிகளில் ஆசிரியர்களே இல்ல! அப்பறம் எப்படி நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியும்- ஜோதிகா அதிரடி

பள்ளிகளில் ஆசிரியர்களே இல்ல! அப்பறம் எப்படி நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியும்- ஜோதிகா அதிரடி

பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வு எப்படி எழுத முடியும் என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும்போது அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்  என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ராட்சசி பட விழாவில் பேசிய ஜோதிகா, “இந்தப் படம் சாட்டை போலவும், என் கதாபாத்திரம் சமுத்திரகனியைப் போலவும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் தெரிவிக்கின்றனர். இதுமாதிரி 100 படங்கள் வந்தாலும் கல்வி மற்றும் பள்ளிகள் குறித்து பேச வேண்டியது அவசியமானது. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஒரே மாதிரியாக ஹீரோக்கள் சண்டை போட்டு, காதலித்து, டூயட் பாடும்போது ஒரே மாதிரி இருப்பதாக சொல்லாதவர்கள், இதுமாதிரியான படங்களுக்கு மட்டும் ஏன் விமர்சித்து பேசுகிறார்கள். 

எனது இந்தப் பயணத்தில் பெண்களுக்கு மரியாதைக் கொடுக்கும் ஆண்களைப் பார்க்க முடிந்தது  மனதுக்கு நிறைவாக இருக்கிறது. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களால் நீட் தேர்வை எப்படி எழுத முடியும்” என்று பேசினார். 

சமூக பிரச்னைகளை குறித்து பொதுவெளியில் அலசும் ஜோதிகா விரைவில் அரசியலில் ஆழம் பார்த்துவிடுவார் என சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.