பல தயாரிப்பாளர்களின் தற்கொலைக்கு கமல் தான் காரணம்! – அமைச்சர் பரபரப்பு பேச்சு

 

பல தயாரிப்பாளர்களின் தற்கொலைக்கு கமல் தான் காரணம்! – அமைச்சர் பரபரப்பு பேச்சு

கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துள்ளதாக அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு: கமல்ஹாசனால் பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்துள்ளதாக அமைச்சர் கருப்பண்ணன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவையும் அதன் அமைச்சர்களையும் ஆரம்பம் முதலே கமல்ஹாசன் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், ஈரோடு அடுத்த சித்தோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் KC கருப்பண்ணன், “கமல்ஹாசனை வைத்து படம் எடுத்து நட்டம் அடைந்த பல தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களை பற்றியெல்லாம பேசுவதற்கு கமல் தயாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருப்பதாகவும் அமைச்சர் கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.