பல கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு: மும்பையை கலக்கும் பிரபல நடிகை!

 

பல கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு: மும்பையை கலக்கும் பிரபல நடிகை!

இந்த வீட்டின் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் கடல் தெரியும் படி இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாம்.

மும்பை: நடிகை தமன்னா மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

tamanna

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் நடிகை தமன்னா. மும்பையைச் சேர்ந்த இவர்  அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடிக் குடியிருப்பில்  வசித்து வருகிறார்.  தமிழை தொடர்ந்து தெலுங்கு, இந்தி என பிஸியாக  நடித்து வரும் தமன்னா மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

tamanna

அதன்படி பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம்  வெர்சோ வாவில் புதிய வீடு ஒன்றை வாங்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். 22 மாடிகளை கொண்ட பே வியூ என்ற பெயர் கொண்ட   அடுக்குமாடிக் குடியிருப்பில் 14 வது தளத்தை  அவர் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்த வீட்டின் ஒரு சதுர அடி விலை ரூ.80,778 ஆகும். 16.6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள இந்த வீட்டின் பத்திரப் பதிவுக்கு மட்டும் ரூ. 99.60 லட்சம் செலவழித்துள்ளார்  என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

TAMANNA

இந்த வீட்டின் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் கடல் தெரியும் படி இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாம். மேலும் இரண்டு கார் பார்க்கிங் வசதியுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை பற்றி வெளியாகியுள்ள தகவல் குறித்து தமன்னா எந்த கருத்தும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வரும் நடிகை டாப்ஸி மும்பையில் வீடு வாங்கியது குறிப்பிடத்தக்கது.