பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் வந்தது பற்றி வாய்திறக்க சசிகலா திட்டம்… கிலியில் தமிழக அமைச்சர்கள்!

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் வந்தது பற்றி வாய்திறக்க சசிகலா திட்டம்… கிலியில் தமிழக அமைச்சர்கள்!

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வந்தது எப்படி என்று வருமான வரித்துறை விசாரணை நடத்தும்போது தமிழக அமைச்சரவையோ கூண்டோடு மாட்டும் என்று கூறப்படுகிறது. இதனால், சசிகலா என்ன சொல்வாரோ என்று ஒவ்வொரு அமைச்சருக்கும் வயிற்றில் புளி கரைத்துவிட்டதுபோல உள்ளதாக கூறப்படுகிறது.

2017ம் ஆண்டு சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய தகவல் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வாக்கிக் குவித்த சொத்துக்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விளக்கம் கேட்டபோது, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்தும் தனக்கே சொந்தம் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து வருவாய்க்கான ஆதாரங்கள் குறித்து வருமான வரித்துறையினருடன் மற்ற அரசுத் துறை அதிகாரிகளும் விசாரணையில் இறங்கியுள்ளார்கள்.

SASIKALA

ஆனால், சசிகலா இதுபற்றி எந்த பதிலும் கூறவில்லை. ஆனால், இப்படியே எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ஒவ்வொருவராக அவர் கை காட்டுவார் என்று கூறப்படுகிறது. யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்று தமிழக அமைச்சர்கள் பெயரை அவர் அறிவிக்கும்போது அது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறும். அமைச்சர்களின் அரசியல் எதிர்காலமே காணாமல் போகும் நிலை ஏற்படும். தன்னிடம் கோடிகோடியாக கொட்டிய அமைச்சர்கள் பட்டியல் முதல், ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க இத்தனை ஆயிரம் கோடி வேண்டும் என்று பேரம் பேசிய மத்திய அமைச்சர்கள் வரையில் பலரது பெயர்களை வெளியிட முடியும் என்று சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம் கர்ஜித்தாராம். 
அது மட்டுமின்றி, அமைச்சர்கள் ஒவ்வொருவர் பற்றி உளவுத்துறை கொடுத்த அறிக்கை முதல் அவர்கள் ஆதி அந்தம் வரை அனைத்தும் சசிகலாவிடம் உள்ளதாம். அவற்றை அம்பலப்படுத்தும் முடிவிலும் இருக்கிறாராம். இதனால் தமிழக அமைச்சர்கள் ஆடிப்போயுள்ளனர். இதனால்தான், தினமும் விட்டால் ஒரு நாளைக்கு மூன்று முறை கூட பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் அமைச்சர் ஒருவரிடம் சசிகலா சொத்து பற்றிக் கேட்டபோது பவ்யமாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது பற்றிப் பேசக்கூடாது என்று ஒதுங்கிவிட்டாராம்.