‘பல் டாக்டரை காணோம்… நீதிமன்றத்தை நாடிய வயதான தாய்’ ; நித்தியானந்தா ஆசிரமத்தில் அடுத்தடுத்த மர்மங்கள்!

 

‘பல் டாக்டரை காணோம்… நீதிமன்றத்தை நாடிய வயதான  தாய்’ ; நித்தியானந்தா ஆசிரமத்தில் அடுத்தடுத்த மர்மங்கள்!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு அவரை மீட்டுள்ளனர். ஒருவருடத்திற்குப் பிறகு மீண்டும் முருகானந்தம் ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.

ஈரோடு நாச்சியப்பா வீதியைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி – லட்சுமி அம்மாள். இவர்களின் மகன் முருகானந்தம் பல் மருத்துவராக இருந்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு பெங்களூருக்கு படிக்க சென்ற இவர் நித்தியானந்தா பேச்சால் ஈர்க்கப்பட்டு ‘பிராணாசாமி’ என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு ஆசிரமத்தில் செட்டிலாகிவிட்டார். காணாமல் போன் மகனை தேடிய அவரது பெற்றோர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு அவரை மீட்டுள்ளனர். ஒருவருடத்திற்குப் பிறகு மீண்டும் முருகானந்தம் ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார்.

tn

திரும்பவும் மகனை தேடி அழைத்து வர பெற்றோருக்குத் தெம்பு இல்லை.. 2017-ல் முருகானந்தம் அப்பா பழனிசாமி இறந்துவிட்டார். அன்று ஒருநாள் மட்டும் சொந்த ஊருக்கு வந்த முருகானந்தம் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் ஆசிரமத்திற்குச் சென்றுள்ளார்.  இதையடுத்து லட்சுமி அம்மாள்  மகனை அடிக்கடி பெங்களூரு சென்று பார்த்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அதற்கு ஆசிரமத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முருகானந்தம் ஆசிரமத்தில் இல்லை என்றும் சொல்லி விட்டார்களாம்.

ttn

இந்நிலையில்  லட்சுமி அம்மாள், மகனைக் காணவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்னும் 4 வாரத்தில் முருகானந்தம் இருப்பிடம் குறித்து பதிலளிக்க நித்தியானந்தாவுக்கும் ஈரோடு எஸ்பிக்கும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் ஈரோடு போலீசார், முருகானந்ததை தேடி  பெங்களூரு புறப்பட்டுள்ளனர். 

hc

ஏற்கனவே தேனி  மருத்துவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஈரோடு மருத்துவரும் காணாமல் போயுள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.