பல் சொத்தையை சரிசெய்யும் இயற்கை வைத்தியம்!

பல் சொத்தையை சரிசெய்யும் இயற்கை வைத்தியம்!

பல் போனால் சொல் போச்சு என்பது கிராமத்து சொலவாடை. குளிர்ந்த நீரைக் குடிப்பதற்கும், இனிப்புகளைச் சாப்பிடவும்.. ஏன்.. சாதாரண உணவை மென்று உண்ணவும் முடியாமல் பற்கூச்சத்தினால் அவதிப்படுகிறீர்களா? கர்ர்ரக்… புர்ர்….ரக் என்று யார் எதை இழுத்தாலும், நமது உச்சந்தலையின் நரம்புகளில் அதிர்வேற்படுத்தும் பற்கூச்சத்தைப் போக்குவதற்கு இயற்கையான வைத்திய முறைகள் உள்ளது. பற்கூச்சத்தோடு, பல் சொத்தையையும் சரி செய்யலாம். பற்களில் குழிகள் ஏற்பட்டால், மிகவும் கடுமையான வலியை எதிர்கொள்வோம். இது உடைந்த பற்களின் கீழாக சீழ் கட்டி, பல் வலியை ஏற்படுத்துகிறது. 

teeth

சொத்தைப் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அதிகமாக பெருகி, பற்களைத் தாங்கும் எலும்புகளில் தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இதனை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், உயிருக்கே உலை வைக்கவும் செய்யும். அதனால், இந்த வைத்திய முறைகள் தற்காலிக நிவாரணங்கள் தான். கூடிய விரைவில் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இனி பற்சிதைவுகளை சரி செய்யும் வைத்திய முறைகளைப் பார்க்கலாம். 
சொத்தை பற்களைச் சரி செய்வதற்கு முன்னால், பல் சொத்தை வருவதற்கான காரணங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள். பொதுவாக பல் சொத்தை பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கும். பல் சொத்தை ஏற்பட முக்கிய காரணமானது, அதிக இனிப்பு சுவையுள்ள உணவுகளைச் சாப்பிடுவதும், அதன் பின்னர் வாய் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். 

teeth

இனிப்பு பொருட்கள் என்றில்லாமல், எந்த வகையான உணவுகளைச் சாப்பிட்டாலும், சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது தான் பற்களில் உள்ள மஞ்சள் கரைகளும், பல் சொத்தையாவதற்குமான காரணங்கள். இந்த சொத்தை பற்களை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் அதன் பிறகு பற்களில் சிறிய ஒட்டைகள் உருவாகி பின்பு மற்ற பற்களிலும் சொத்தை விழ ஆரம்பித்து விடும், மற்றும் ஈறுகளில் நோய்தொற்றுகள் ஏற்பட்டு பற்களில் மற்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
தினமும் காலையில், வாயில் 10மில்லி நல்லெண்ணெயை ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.  அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.
தினமும் இரவில் தூங்கும் போது மூன்று துளிகள் கிராம்பு எண்ணெயை, கால் டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்குங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்.
தினமும் காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் ஒரு நிமிடம் வாய் கொப்பளித்து வந்தால் சரியாகும். தினமும்,  மூன்று வேலை உணவு உட்கொள்ளும் முன் இப்படிச் செய்து வந்தால் பல் சொத்தையில் இருந்து விடுப்படலாம்.

teeth

மூன்று பூண்டு பற்களை எடுத்து நன்றாக தட்டி அதனுடன்  கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து அந்த கலவையை சொத்தையான பற்களின் மீது 10 நிமிடங்கள் வைத்து நன்றாக அழுத்த வேண்டும். இவ்வாறு தினமும் 2 முறை செய்து வந்தால் சொத்தைப் பற்களில் ஏற்படும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்படும். நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்.
மஞ்சள் தூளை சொத்தை பல்  உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேய்த்து 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் விரைவில் சொத்தைப் பல் பிரச்சனை குணமாகும்.
வேப்பிலை சாறை சொத்தை பற்கள் மீது தேய்த்து 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் காலை வேப்பங்குச்சி கொண்டு பல்துலக்கி வந்தாலும், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.