பல் ஈறுகளில் வளர்ந்த முடி..மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!

 

பல் ஈறுகளில் வளர்ந்த முடி..மருத்துவ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!

மருத்துவத்துறைக்குச் சவால் விடுக்கும்  வகையில் பல வினோதமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

இளம்பெண் ஒருவருக்கு வாயில் முடி வளரும் வினோதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறையில்  பல்வேறு மருந்துகளும் தொழில்நுட்பமும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மருத்துவத்துறைக்குச் சவால் விடுக்கும்  வகையில் பல வினோதமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

ttn

அந்த வகையில், இத்தாலியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஈறுகளில் கண் இமைகளில் வளர்வதை போல முடிகள் வளர்ந்துள்ளதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார். தொடர்ந்து நடத்திய பரிசோதனையில், PCOS எனும் சினைப்பை பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் எனும் சுரப்பி அதிகமாக சுரக்கும். இதனால் முகத்தில் மற்றும் உடலில் முடிவளர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் தான் அந்த பெண்ணுக்கு பல் ஈறுகளில் முடி வளர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 

ttn

இதுகுறித்து கூறும் மருத்துவர்கள், ‘குழந்தை பிறப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்னையை  குணப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு பெண் இதே பிரச்னையால்  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண்ணின் பல் ஈறுகளில் உள்ள முடிகள் அகற்றப்பட்டு தசையின் ஒருபகுதி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது’  என்று கூறியுள்ளனர்.