பலியான தமிழக வீரர்கள் உடல் திருச்சிக்கு வந்தன

 

பலியான தமிழக வீரர்கள் உடல் திருச்சிக்கு வந்தன

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் இன்று காலை 11 மணிக்குக் கொண்டு வரப்பட்டன

திருச்சி: காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் இன்று காலை 11 மணிக்குக் கொண்டு வரப்பட்டன.

பிப்ரவரி 14ம் தேதியன்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் கொல்லப்பட்டனர்.இதில் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த சுப்ரமணியன் ஆகியோரும் அடங்குவர்.

வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களின் உடல்களும் புட்காம் சிஆர்பிஎப் முகாமுக்கு நேற்ற கொண்டுவரப்பட்டன.அங்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத், காஷ்மீர் ஆளுநர், ராணுவத் தலைமை தளபதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அனைவரின் உடலும் தில்லிக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தில்லியிலிருந்து அனைத்து வீரர்களிந் உடல்களும் இன்று காலையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக வீரர்களின் உடல்கள் காலை 11 மணியளவில் திருச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தன.

அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டன. வீரர்களின் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலையில் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுகின்றன.