பலான மேட்டருக்கு மருந்தாகும் மூளை ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்..!

பலான மேட்டருக்கு மருந்தாகும் மூளை ஃபிரை… இப்படி செய்து பாருங்கள்..!

ஆட்டு ஸ்பேர் ஸ்பார்ட்சில் எளிதாக சமைக்க கூடிய பாகம் ஆட்டு மூளைதான்.
ஆட்டுக்கறியில் கொழுப்பு அதிகம் இருந்தாலும் அதன்  குடல், ஈரல், சுவரொட்டி, மாங்காய் ( கிட்னி) மூளை இவற்றில் கொழுப்பு மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. அதுவு மூளையில் ஒமேகா -3 போன்ற சத்துக்கள் இருப்பதால் இதை குழந்தைகளுக்குக் கூட கொடுக்கலாம்.
பத்து நிமிடத்தில் செய்து விடலாம்.

brain fry

தேவையான பொருட்கள்.

ஆட்டு மூளை – 2
சின்ன வெங்காயம் – 10 ( பொடியாக வெட்டியது)
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
மல்லித்தூள் 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ½ டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் -2 டீஸ்பூன்.

செய்முறை:

முதலில் மூளையை சுத்தம் செய்து,அதில் இருக்கும் நரம்பை எடுத்து விட்டு சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.அந்த துண்டுகளை ஒரு சிறிய வானலியில் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விடுங்கள்.
அத்துடன் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்,½ டீஸ்பூன் உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விட்டு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

brain fry

இப்போது-இன்னொரு வானலியை அடுப்பில் வைத்து அதிக எண்ணெய் விட்டு, அது சூடானதும் பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.பாதி வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்புச் சேர்த்து வதக்குங்கள்,பச்சை வாசனை போனதும் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்குங்கள்.பொடிகள் நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் , வேகவைத்து வைத்திருக்கும் மூளைத் துண்டுகளை அதில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து இதில் கொட்டி கிளறி விடுங்கள். பொறுமையாக கிளற வேண்டும்,இல்லாவிட்டால் மூளை உதிர்ந்து விடும்.

இப்போது,வானலியை ஒரு மூடி போட்டு மூடி 3 நிமிடம் வேகவிடுங்கள்.அதில் இருக்கும் தண்ணீர் வற்றியதும் அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள்.
இப்போது மூளை ஃபிரை ரெடி,சாம்பார் ,அல்லது ரசம் சோற்றுக்கு சிறப்பான சைடிஷாக இருக்கும்.பலான பலான மேட்டருக்கும் பொருத்தமான சைடிஷ்சாக இருக்கும்.
எஞ்சாய்!