பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு!

ஊடரங்கை மீறி மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ளது. அதில்  சென்னையில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஊடரங்கை மீறி மக்கள் வெளியில் வரவேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. 

ttn

இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,08,139 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 94,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,79,827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ரூ.89,23,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கை மீறியவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் வாகனங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனம் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.