பறிபோகும் எடப்பாடி நிம்மதி… டெல்லிக்கு படையெடுக்கும் ஓ.பி.எஸ்..! 

 

பறிபோகும் எடப்பாடி நிம்மதி… டெல்லிக்கு படையெடுக்கும் ஓ.பி.எஸ்..! 

டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பர்சனல் விஷயங்களோடு, பதவி விஷயத்திலும் சாதித்துக்கொண்டு திரும்பி விட்டார். 

தள்ளாடிக் கொண்டிருந்த முதல்வர் நாற்காலியில் பெவிகல் போட்டு உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அதிக நம்பிக்கையை விதைத்து விட்டது பாஜக. சட்டசபை கூட்டத் தொடரில் பிரச்னை வந்தால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூலம் தனது அரசை பாதுகாப்பது பற்றி பேசி இருக்கிறார். இதனால் நிம்மதியோடு திரும்பி இருக்கிறார் எடப்பாடி

டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பர்சனல் விஷயங்களோடு, பதவி விஷயத்திலும் சாதித்துக்கொண்டு திரும்பி விட்டார். 

edappadi

தள்ளாடிக் கொண்டிருந்த முதல்வர் நாற்காலியில் பெவிகல் போட்டு உட்கார்ந்து கொள்ளும் அளவுக்கு அதிக நம்பிக்கையை விதைத்து விட்டது பாஜக. சட்டசபை கூட்டத் தொடரில் பிரச்னை வந்தால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மூலம் தனது அரசை பாதுகாப்பது பற்றி பேசி இருக்கிறார். இதனால் நிம்மதியோடு திரும்பி இருக்கிறார் எடப்பாடி.

அவர் சென்னை திரும்பி ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள் குடைச்சலை கொடுக்க ஓ.பிஎஸ் தயாராகி வருகிறார். சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமியை துணை முதல்வர் ஓ.பி.எஸ் நேரில் போய் பார்க்கவில்லை. அமைச்சர் ஜெயகுமாரை அழைத்து போனது ஏன்? நிதி ஆயோக் என்றால் அந்த நிதியின் அமைச்சரே ஓ.பி.எஸ் தானே. அவரை ஏன் அழைத்து செல்லவில்லை என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். 

o.p.s

ஆனால், டெல்லி பாஜக தலைவர்கள்ளை ஓ.பி.எஸ் தனியாக சந்திக்கவே விரும்புகிறாராம். எடப்பாடியை விட தனக்கே டெல்லியில் நெருக்கம் அதிகமாக இருந்த நிலை மாறி இப்போது அவருக்கும் செல்வாக்கு அதிகரித்து விட்டதாக நினைக்கிறாராம் ஓ.பி.எஸ். இதனால், அடுத்த சில வாரங்களில் ஓ.பி.எஸ் டெல்லிக்கு போகத் தயாராகி வருகிறார். 

அப்போது தன்னை பற்றி எடப்பாடி என்ன சொன்னார்? என்பதை தெரிந்து கொண்டு எடப்பாடி பழனிசாமியின் ரகசியங்களையும் புட்டு புட்டு வைக்கத் தயாராகி வருகிறாராம் ஓ.பி.எஸ். இருவரும் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் சொல்லும் ரகசியங்களை உள்ளூர ரசித்து வருகிறது பாஜக டெல்லி தலைமை. இப்படி இருவரும் கயிறு திரித்து வந்தால் தமிழகத்துக்கான திட்டங்களை எப்படி உரிமையோடு கேட்டு வாங்க முடியும்? எனப்புலம்புகிறார்கள் நடுநிலைமையாளர்கள்.