பறக்கும் விமானத்திலிருந்து பறந்து சென்ற பாகங்கள்!

 

பறக்கும் விமானத்திலிருந்து பறந்து சென்ற பாகங்கள்!

பறக்கும் விமானத்திலிருந்து பறந்த பாகங்கள்!

பறந்து சென்ற விமானத்திலிருந்து திருகாணி, வேகக் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை  காணாமல்போனதாக புகார் எழுந்துள்ளது. 

ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்நிறுவன விமானங்களில் பாகங்கள் காணாமல் போனதுதான் அதற்குக் காரணம். ஜப்பானிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்தனர். இருப்பினும் காணாமல் போன விமானப் பாகங்களால் விமானத்தின் பாதுகாப்பிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திருகாணி, வேகக் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை இதுவரை காணாமல் போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜப்பானிய விமானப்படை அதிகாரிகள் மே 26ஆம் தேதியிலிருந்து 28ஆம் தேதி வரை பல சோதனைகளை நடத்தினர். 4 நாள்களில் ஹாங்காங் ஏர்லைன்ஸ் விமானத்தின் 7 பயணங்கள் சோதனையிடப்படன. அதில் விமானத்தின் 11 பாகங்கள் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விமானப் பாகங்கள் கீழே விழும் பிரச்சினைக்கான காரணத்தை ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆராயவேண்டும் என்று ஜப்பான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டது. அதே வேளையில், விமானம் பறக்கும்போது பாகங்கள் கீழே விழாமல் இருக்க, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.