‘பறக்கும் கார்’ தொழிற்சாலைக்கு குஜராத்தில் ஒப்புதல் – 2021 முதல் உற்பத்தி தொடக்கம்

 

‘பறக்கும் கார்’ தொழிற்சாலைக்கு குஜராத்தில் ஒப்புதல் – 2021 முதல் உற்பத்தி தொடக்கம்

பறக்கும் காரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு குஜராத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

காந்திநகர்: பறக்கும் காரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு குஜராத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் தங்கள் ‘பறக்கும் கார்’ உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை குஜராத்தில் தொடங்க உள்ளது. 2021-ஆம் ஆண்டுக்குள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PAL-V என்பது அந்த பறக்கும் காரின் பெயராகும்.

இந்த பறக்கும் காரானது இரண்டு என்ஜின்கள் கொண்டிருக்கும். சாலையில் பயணிக்கும்போது மணிக்கு 160 கி.மீ வேகத்திலும் மற்றும் பறக்கும்போது மணிக்கு 180 கி.மீ வேகத்திலும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் காரை ஸ்டார்ட் செய்தவுடன் 3 நிமிடங்களில் பறக்கும் நிலைக்கு செல்லக் கூடிய திறன் கொண்டதாகும். இந்த பறக்கும் காரில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 500 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி முன்னிலையில் மாநில தொழில்துறை முதன்மை செயலாளர் எம்.கே.தாஸ் மற்றும் PAL-V இன் சர்வதேச வணிக வளர்ச்சியின் துணைத் தலைவர் கார்லோ மாஸ்போம்ல் ஆகியோருக்கு இடையே இந்த தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.