பரோட்டோ வாங்கிக்கொடுத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை… 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

பரோட்டோ வாங்கிக்கொடுத்து சிறுமிக்கு பாலியல் கொடுமை… 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

கேரளமாநிலம் காசர்கோடு மங்கள்பாடி,கும்பனூரைச் சேர்ந்த யஷ்வந்த் என்கிற அப்புவுக்கு (36) தலித் சிறுமியை ஏமாற்றி பாலியல் உறவுக்கு பயனபடுத்திய வழக்கில் பத்தாண்டு கடுங்காவல் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அவதாரமும் விதித்தது கோர்ட். 

harasment

பாதிக்கப்பட்ட 14 வயது தலித் சிறுமிக்கு புரோட்டாவும்,மீன்குழம்பும் வாங்கிக் கொடுத்து பக்கத்தில் இருந்த பள்ளிகூட வராந்தாவில் வைத்து அவளோடு உறவுகொண்டு இருக்கிறார் அப்பு.இந்த உறவு 2014 ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தொடங்கி 2015 ஜனவரிவரை தொடர்ந்திருக்கிறது.சிறுமியின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகப்பட்ட பெற்றோர் சைல்ட் லைன் போலீஸ் பிரிவில் தகவல் தெரிவித்தனர்.

judgement

அவர்கள் சிறுமியை விசாரித்த போதுதான் அப்பு குறித்த தகவல்கள் வெளிவந்தன.அதைத் தொடர்ந்து அப்பு கைது செய்யப்பட்டார்.டிஎஸ்பி என்.சுரேந்திரன் தலைமையிலான போலீசார் 13 சாட்சிகளை கொண்டு அப்புவின் குற்றச் செயலை திறமையாக கோர்ட்டில் நிரூபித்தனர்.வழக்கை விசாரித்த காஸர்கோடு மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி பி.எஸ் சசிகுமார் குற்றவாளிக்கு பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 25000 அபராதமும் விதித்தார்.அதை செலுத்தத்  தவறினால் மேலும் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.