பருவமழை!- இப்போதே அலர்ட்டாகும் சென்னை மாநகராட்சி

 

பருவமழை!- இப்போதே அலர்ட்டாகும் சென்னை மாநகராட்சி

கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பருவமழையால் சென்னை மீண்டும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி இப்போதே தயாராகி வருகிறது.

பருவமழை!- இப்போதே அலர்ட்டாகும் சென்னை மாநகராட்சி

சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மெட்ரோ குடிநீர் வாரியம் உள்ளிட்ட அனைத்து சேவை துறைகளுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், நீர்நிலைகள் புனரமைத்தல் உள்ளிட்ட பணிகளால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் தேக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில், 105 புனரமைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 லட்சம் அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 311 சமுதாய கிணறுகள் தூர் வாரப்பட்டு அருகிலுள்ள தெருக்களின் மழைநீர் சேகரிப்பு இணைக்கப்பட்டு உள்ளன.

பருவமழை!- இப்போதே அலர்ட்டாகும் சென்னை மாநகராட்சி

சென்னையில் அதிக அளவு நீர் தேக்கம் அடையக்கூடிய இடங்களாக 2015ல் 306 இடங்களும், 2017ல் 205 இடங்களும், 2018ல் 53, 2019ல் 19 இடங்களும் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் வாய்ப்பு அதிகம் உள்ள 16 சுரங்க பாதைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக தற்பொழுது நீர் தேக்கம் அடையும் இடங்கள் இல்லை என்று கூறினார்.