பருவநிலை மாற்ற வரைவு அறிக்கையை நிராகரித்த அரசு… இரண்டே நிமிடத்தில் கூட்ட அரங்கில் நுழைந்த வெள்ளம்! – இத்தாலியில் பரபரப்பு

பருவநிலை மாற்ற வரைவு அறிக்கையை நிராகரித்த அரசு… இரண்டே நிமிடத்தில் கூட்ட அரங்கில் நுழைந்த வெள்ளம்! – இத்தாலியில் பரபரப்பு

இத்தாலியில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டியவை பற்றிய வரைவு அறிக்கையை அமைச்சர்கள், அதிகாரிகள் நிராகரித்த அடுத்த இரண்டே நிமிடத்தில் கூட்டம் நடந்த இடம் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால், அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியில் 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள், எம்.பி-க்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்துகொண்டிருந்தது

இத்தாலியில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செய்ய வேண்டியவை பற்றிய வரைவு அறிக்கையை அமைச்சர்கள், அதிகாரிகள் நிராகரித்த அடுத்த இரண்டே நிமிடத்தில் கூட்டம் நடந்த இடம் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால், அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தாலியில் 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக அமைச்சர்கள், எதிர்க்கட்சி நிர்வாகிகள், எம்.பி-க்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, ஜனநாயக கட்சி நிர்வாகி ஆண்ட்ரியா சனோனி என்பவர், பருபநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான வரைவு அறிக்கையை சமர்பித்து அதை ஏற்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர், “பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஏற்கனவே போதிய நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, புதிதாக இது தேவையில்லை” என்று கூறி அந்த வரைவு அறிக்கையை நிராகரித்தனர்.

italy

அடுத்த இரண்டு நிமிடங்களில் கூட்டம் நடந்த அறைக்குள் மழை நீர் வெள்ளம் போல நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உடனடியாக கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறினர்.
கூட்ட அறை தண்ணீரால் நிரம்பி இருக்கும் படத்தை ஆண்ட்ரியா சனோனி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், பருவநிலை இன்னும் மோசமடைந்து மழை அதிகரிக்கும் என்றும். இதனால், வெனிஸ் உள்ளிட்ட நகரங்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சாித்துள்ளார்.