பருப்பு உருண்டைக் குழம்பு

 

பருப்பு உருண்டைக் குழம்பு

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு        – 1/4கிலோ
தேங்காய்துருவல்        – 1கப்
இஞ்சி                    – சிறிய துண்டு
பூண்டு                    – 3பல்
மஞ்சள் தூள்            – 1டீஸ்பூன்

dal

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு        – 1/4கிலோ
தேங்காய்துருவல்        – 1கப்
இஞ்சி                    – சிறிய துண்டு
பூண்டு                    – 3பல்
மஞ்சள் தூள்            – 1டீஸ்பூன்
கசகசா                    – 1/2டீஸ்பூன்
தனியாதூள்                – 1டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்        – 10
சோம்பு,சீரகம்            – 1டீஸ்பூன்(தலா)
பெரிய வெங்காயம்    – 3
தக்காளி                – 3
புதினா கொத்தமல்லி    – சிறிதளவு
எண்ணெய்                – தேவையான அளவு
பட்டை , ஏலக்காய், கிராம்பு    -சிறிதளவு

செய்முறை

dal

கடலை பருப்பை நன்கு கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனுடன் சோம்பு, சீரகம், உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும்,அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பொரித்து எடுத்துக் கொள்ள  வேண்டும். தேங்காய் துருவல், கசகசா சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து , வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு போட்டு வதக்க வேண்டும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தனியா தூள், உப்பு சேர்த்த பிறகு தேங்காய் விழுதை கொதிக்கும் கலவையில் ஊற்ற வேண்டும். கொத்தமல்லி இழை சேர்த்து  இறக்கி விடவும். பொரித்த உருண்டைகளை போட்டு 20 நிமிடங்கள் கழித்து உருண்டை நன்றாக ஊறியதும் பரிமாறலாம். பருப்பு உருண்டை குழம்பு சாதத்தில் போட்டு சாப்பிட மட்டுமல்ல சப்பாத்தி, தோசைக்கு சைட்டிஷ் ஆகவும் சுவைக்க ஏற்றது.

dal