பரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க! குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்? 

பரிகாரத்துக்கு பதிலா பாவத்தை சேர்க்காதீங்க! குரு பெயர்ச்சி யாரை கும்பிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்? 

ஆன்மிக செயல்களில், எதற்காக செய்கிறோம் என்கிற கேள்வி எதுவும் இல்லாமல், சில விஷயங்களை எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக நாமும் செய்து வருகிறோம். அப்படி சமீப காலங்களாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் 99  சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.

guru

அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின்  எண்ணிக்கை மிகக் குறைவாக வியாழக்கிழமைகளில் காணப்படுகிறது. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது  சரி தானா என்றெல்லாம் இவர்கள் யோசிப்பதேயில்லை. 
இவர்கள் இருவருக்கும் உள்ள  வித்தியாசம் என்ன என்றாவது யோசித்திருக்கிறீர்களா? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில்  ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற  ஆடையை  உடுத்தியிருப்பவர். 
‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று  பொருள். வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றி பரிகாரம் செய்வதற்கு பதிலாக பாபத்தை சேர்த்துக் கொள்கிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை  முக்கியமில்லை. ஆகவே பரிகாரத்திற்காக வழிபடுபவர்கள் எந்த கடவுள் என்பதை அறிந்து உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள்!