பராமரிக்க தவறிய சுங்கச்சாவடிக்கு ரூ 30 கோடி அபராதம்! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி!

பராமரிக்க தவறிய சுங்கச்சாவடிக்கு ரூ 30 கோடி அபராதம்! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி!

பயண நேரத்தை கணிசமான அளவிற்கு குறைப்பது, வாகன நெரிசல் இல்லாத விரைவான பயணம், தரமான சாலைகளில், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் என்று பல சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட தங்க நாற்கர சாலைகள் உட்பட நாடு முழுவதும் அறிமுகமான புதிதில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை நிறுவி, கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு அனுமதித்து வந்தனர்.

tollgate

சுங்கச்சாவடிக் கட்டணம் செலுத்தினாலும் விரைவான, பாதுகாப்பான பயணம், தரமான சாலை என்று மக்கள் ஆர்வமாக பயன்படுத்தத் தொடங்கினார்கள். வருடங்கள் ஓட, பல நெடுஞ்சாலைகள் தரமிழந்து காணப்படுகின்றன. அப்படி, ரோபார் மாவட்டத்தில் உள்ள பெஹ்ராம்பூர் பகுதியில் சொல்கியான் என்ற சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த சுங்கச்சாவடி, கடந்த சில ஆண்டுகளாக குராலி- கிர்தாபூர் சாகிப் நெடுஞ்சாலையை பராமரித்து, வாகன ஓட்டிகளுடன் சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு, இந்த சுங்கச்சாவடிக்கு உட்பட்ட நெடுஞ்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல பணிகள் முடிக்கப்பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பணிகளை  முடிக்கும்படி அதிகாரிகள் எச்சரித்து சென்றனர், ஆனால் இந்நிலை தொடரவே, கடந்த 2018ம் ஆண்டு, சொல்கியான் சுங்கச்சாவடி சுங்ககட்டனம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என தன்னார்வலர் தரப்பில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுங்கச்சாவடி வைத்திருக்கும் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

tollgate

இந்நிலையில், குராலி சாலையில் விளக்குகள் பொருத்தாது, சாலையின் இருப்பக்க எல்லையை குறிக்கும் வண்ணக்கோடுகள், பாதசாரிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம், இணைப்புச்சாலை குறியீடு, சாலையின் சில பகுதிகள் தார் இடப்பாடமல் காங்கிரீட் மட்டுமே போடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதையடுத்து அரசின் உத்தரவை கடந்த ஜூலை மாதம் வரை பின்பற்ற தவறியதாக அந்நிறுவனத்துக்கு சுமார் 30 கோடி ரூபாயை அபராதம் விதித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.