பரவி வரும் டெங்கு: 7 டன் பழைய டயர்களை பறிமுதல் செய்த மாநகராட்சி!

 

பரவி வரும் டெங்கு: 7 டன் பழைய டயர்களை பறிமுதல் செய்த மாநகராட்சி!

மாங்காடு பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சுகாதாரத் துறையினர்,கொசுத் தடுப்பு பணியாளர்களை நியமித்து தண்ணீர் தேங்கியுள்ளதா.. வீடுகளின் சுற்றுப்புறம் தூய்மையாக வைக்கப் பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் பருவ மழைக் காலம் துவங்கிய நிலையில், டெங்கு காய்ச்சல் விரைவாகப் பரவத் தொடங்கி விட்டது. பல உயிர்கள் பறிபோவதை கட்டுப் படுத்த முடியாமல் அரசும் மாநகராட்சியும் திணறி வருகிறது. நேற்று சென்னை மாங்காட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி டெங்குகாய்ச்சலால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Dengue fever control

இதனையடுத்து, இதுபோன்ற உயிரிழப்பு மீண்டும் நிகழாமல் இருக்க, சென்னை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணிகளில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நரிவனம் பகுதியில் தேக்கி வைக்கப் பட்டிருந்த 7 டன் பழைய டயர்களை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்தும், அந்த குடோன் உரிமையாளருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்தனர். 

Dengue

மேலும், மாங்காடு பகுதிகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு சுகாதாரத் துறையினர்,கொசுத் தடுப்பு பணியாளர்களை நியமித்து தண்ணீர் தேங்கியுள்ளதா.. வீடுகளின் சுற்றுப்புறம் தூய்மையாக வைக்கப் பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், லேசாக காய்ச்சல் இருந்திருந்தால் கூட அவர்களை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. அது மட்டுமின்றி குன்றத்தூர், வாலாஜா பாத், ஸ்ரீ பெரும்புதூர் பகுதிகளிலும் 100க்கு மேற்பட்ட கொசுத் தடுப்பு பணியாளர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. 

Dengue control