பரவி வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்: மதுரையில் 12 பேருக்குத் தீவிர சிகிச்சை..

 

பரவி வரும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்: மதுரையில் 12 பேருக்குத் தீவிர சிகிச்சை..

தமிழக அரசும் மாநகராட்சியும் தீவிரமாக டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், டெங்குகாய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க முடியவில்லை.

தமிழகத்தில் மழைக் காலம் துவங்கியதும், டெங்கு மற்றும் வைரஸ் போன்ற உயிர்க்கொல்லி காய்ச்சல்களும் விரைவாகப் பரவி வருகின்றன. டெங்குவால் சில நாட்களுக்கு முன்னர் 9  வயது சிறுமி உயிரிழந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழக அரசும் மாநகராட்சியும் தீவிரமாக டெங்கு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், டெங்குகாய்ச்சல் பரவி வருவதைத் தடுக்க முடியவில்லை.

Dengue

இந்நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் சுமார் 200 பேர் காய்ச்சலால் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்காக வந்தவர்களிடம் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், 11 பேருக்கு வைரஸ் காய்ச்சல் எனவும், 14 வயது சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Special ward

இது குறித்துப் பேசிய ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் வனிதா, டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 12 பேரையும் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். டெங்கு பரவி வருகிறது என உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.