பரவத் தொடங்கியது மெட்ராஸ் ஐ.. ஒரே வாரத்தில் 800 பேர் பாதிப்பு : இதை மட்டும் செய்யவே கூடாது!

 

பரவத் தொடங்கியது மெட்ராஸ் ஐ.. ஒரே வாரத்தில் 800 பேர் பாதிப்பு : இதை மட்டும் செய்யவே கூடாது!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் ஒரு காட்டம் காட்டி வருகிறது. அதே போல, கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்களும் பரவ ஆரம்பித்து விட்டன. குறிப்பாக இளஞ்சிவப்பு கண் நோய் எனப்படும் மெட்ராஸ் ஐ. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட நபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு எதனால் வருகிறது.. எப்படி வருகிறது என்று பார்க்கலாம்… 

ttn

கண்களைத் தாக்கும் இந்த பாதிப்பு, நம் கண்களில் உள்ள வெண்படலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் கண்களின் வெள்ளை நிற பகுதியிலும், நம் இமைகளின் ஓரங்களிலும் ஏற்படும். இந்த தொற்று நோய் எளிதில் பரவக் கூடியது. பெரியவர்களைக் காட்டிலும், இது குழந்தைகளையே தாக்கும். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெரியவர்களுக்கும் அதன் மூலம் பரவும். மெட்ராஸ் ஐ தொற்றைப் பாதிப்படைந்தவர்களிடம் இருந்து விலகி இருந்தால், நமக்கு வராமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. 

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்குக் கண்களிலிருந்து அதிகமாக வெளியாகும் கண்ணீர், கண் இமைகள் மீது ஒரு படலமாக உருவாகி, கண்களிலிருந்து வெள்ளை கழிவுகளை வெளியேற்றி எரிச்சல் தன்மையை உண்டாக்கும். அதன் காரணமாகக் கண் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி, வெள்ளை நிற திரவம் சுரந்து வெளியேறும். மேலும், அவர்களுக்கு மங்கலான பார்வையும், கண்களில் வெயில் பட்டால் கூசும் தன்மையும் ஏற்படும்  மெட்ராஸ் ஐ தொற்றைப் பாதிப்படைந்தவர்களிடம் இருந்து விலகி இருந்தால், நமக்கு வராமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

ttn

மெட்ராஸ் ஐ வந்து விட்டால், கண்களைத் தொடவும் தேய்க்கவும் கூடாது. எரிச்சலின் காரணமாக மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எந்த ஆயின்மென்டும் கண்ணில் விட கூடாது. உங்களின் கண் லென்ஸ் மற்றும் கண்ணனுக்கு மேக் அப் போடும் சாதனங்களைப் பகிரக் கூடாது. இந்த நோய்.. பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்ப்பதால் வருவதில்லை என்றும் அவர்களிடம் தொட்டுப் பேசினால் பரவும் என்றும் கூறப்படுகிறது. அதனால், அவர்களுடன் பேசிய பின் சோப்பு போட்டு கைகளைக் கழுவி விடுவது நல்லது.