பரம்பரை வரியிலிருந்து தப்பிய மெகா கோடீஸ்வரர்கள்!

 

பரம்பரை வரியிலிருந்து தப்பிய மெகா கோடீஸ்வரர்கள்!

பரம்பரை வரி மீண்டும் அமலுக்கு வரும் எதிர்பார்த்த நிலையில், நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் அது தொடர்பாக எந்தவொரு அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் மெகா கோடீஸ்வரர்கள் பரம்பரை வரியிலிருந்து தப்பினர்.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பரம்பரை வரி வசூலிக்கப்படுகிறது. பரம்பரை வரின்னா என்ன, என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். பெற்றோர், முதாதையர் மற்றும் உறவினர்கள் வாயிலாக ஒருவருக்கு கிடைக்கும் பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அந்த வரிதான் பரம்பரை அல்லது எஸ்டேட் வரி எனப்படும். 1985ம் ஆண்டு வரை பரம்பரை வரி இந்தியாவில் வசூலிக்கப்பட்டது. 

பரம்பரை வரி

குறிப்பிட்ட மதிப்புக்கு அதிகமான சொத்துக்கள் கை மாறும்போதுதான் பரம்பரை வரி விதிக்கப்படுகிறது. எனவே சாமானிய மக்களுக்கு கவலை கிடைாயது. இந்த பரம்பரை வரி பெரும் பணக்காரர்களை குறிவைத்துதான் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு பிறகு பரம்பரை வரியை மத்திய அரசு மீண்டும் அமல்படுத்த உள்ளது. இது குறித்த அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் என பரபரப்பாக பேசப்பட்டது.

பரம்பரை வரி

ஆனால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் பரம்பரை வரி குறித்த அறிவுப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் பெரும் பணக்காரர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ரூ.2.5 கோடி முதல் ரூ.5  கோடி வரை வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக 3 சதவீதம் வரி செலுத்த வேண்டும். மேலும், ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர் கூடுதலாக செலுத்த வேண்டும்.

பெரும் பணக்காரர்களுக்கு தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால் பரம்பரை வரி விதிப்பை நிர்மலா சீதாராமன் கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வரும் நிதியாண்டுகளில் மீண்டும் பரம்பரை வரி குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.