பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 

 

பரமபத வாசல் கூடுதலாக 10 நாட்கள் திறக்கப்படும் ! பக்தர்களின் சொர்க்திற்கு செல்லும் கனவு நிறைவேறும் ! 

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து பக்தர்களும் பரமபத வாசலை கடக்க வேண்டும் என்ற கோரிக்கையை எற்று மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.  வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைணவ கோயில்களில் திறக்கப்படும் பரமபத வாசலை கடந்து செல்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்றும் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பதும் இந்து மத மக்களின் நம்பிக்கை.

tirpati

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் பரமபத வாசல் ஜனவரி மாதம் திறக்கப்படுவது வழக்கம். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அனைவராலும் பரமபத வாசலை கடக்க முடிவதில்லை. 
இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக பரமபத வாசலை மேலும் 10 நாட்கள் திறந்து வைக்க ஆகம விதிகள் அமைப்பு குழுவிடம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது

crowd

திருமலை திருப்பதி நிர்வாகம். அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரமபத வாசலை, கூடுதலாக 10 நாட்கள் திறப்பது தொடர்பான நடவடிக்கை, தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான டிரஸ்ட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இனி பக்தர்கள் திருப்பதி திருமலையானை மனதார தரிசித்து விட்டு வரலாம்