பரமக்குடியில் முதல் முறையாக குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உலக நாயகன்…

 

பரமக்குடியில் முதல் முறையாக குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  உலக நாயகன்…

களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

kamal

உலக நாயகன் கமல் ஹாசன் ஐந்து  வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றுவரை திரையுலகில் உச்ச நட்சத்திரமாக  இருந்து வருகிறார்.  

kamal

அவர் அரிதாரம் பூசாத வேடங்களே இல்லை..  நடிகர் என்று சின்ன வட்டத்துக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாத கமல் இயக்குநர்,  தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர்  என பன்முக தன்மை கொண்டவர்.

kamal

இதுவரை 3 தேசிய விருதுகளையும், 18 திரைப்பட விழா விருதுகளையும் பெற்றுள்ள கமல்ஹாசனுக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. அத்துடன்  கமல் ஹாசன் என்ற திரையுலக சகாப்தம்  திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிறது. 

kamal

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

kamal

இதனால் பரமக்குடியில் உள்ள தனது வீட்டில் தனது அப்பாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்துள்ளார்.  

kamal

இந்த கொண்டாட்டத்தில் கமலுடன், அவரது அண்ணன்  சாருஹாசன், மகள்கள்  ஸ்ருதி மற்றும்  அக்ஷரா, நடிகர் பிர பு உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டுள்ளனர். இதற்கான புகைப்படங்கள் இணையத்தில்  வைரலாகி வருகிறது.