பரந்தூரில் பக்கவாக தயாராகிறது சென்னையின் இரண்டாவது விமானநிலையம்! – அரசு தீவிரம்

பரந்தூரில் பக்கவாக தயாராகிறது சென்னையின் இரண்டாவது விமானநிலையம்! – அரசு தீவிரம்

அரக்கோணம் அருகே பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஓ.கே சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. புதிய விமானநிலையத்தை சென்னையுடன் இணைக்கும் சாலை, ரயில் பாதைகள் அமைக்கும் பணிகளுக்கு திட்டமிடுதல் வேகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க போதுமான ஓடுபாதை இல்லை. விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தவும் அரசால் முடியவில்லை. இதனால், இரண்டாவது விமானநிலையம் அமைக்கப்படும் என்று 15 ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. திருபெரும்புதூரில் விமானநிலையம் அமைக்கப்படும் என்று தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாறிய பிறகு காட்சியும் மாறியது.

parandur-airport

விமானநிலையம் அமைக்க செங்கல்பட்டு அருகே மாமண்டூர், அரக்கோணம் அருகே பதந்தூர் என இரண்டு இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் பரந்தூர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இங்கு 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய விமானநிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர விமானம் சார்ந்த வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையிலான நிறுவனங்கள், பயிற்சி மையங்களும் அங்கு அமைக்கப்பட உள்ளன. பரந்தூரில் விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர், அங்கிருந்து சர்வதேச விமானங்களை இயக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்துள்ளது.
புதிய விமானநிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி பரிசீலனை நடந்து வருகிறது. விமான நிலையத்தின் வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. சர்வதேச அளவில் வடிவமைப்பு மற்றும் மாதிரிகள் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து புதிய விமான நிலையத்துக்கு செல்ல மெட்ரோ, பஸ், புறநகர் ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. திரிசூலம் விமான நிலையம் முதல் பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடம் தொடக்கத்தில் திருமழிசை வரையிலும், அதன் பின்னர் பரந்தூர் வரையிலும் நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.