பரணி நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள் 

 

பரணி நட்சத்திரக்காரர்களின் குணநலன்கள் 

பரணி நட்சத்திரக்காரர்களின் குணாதிசயங்கள் பற்றியும் அவர்களின் உன்னதாமான பண்புகளை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், துன்பப்பட்டு வருவோருக்கு ஆறுதல் சொல்வதுடன் உங்கள் கையில் இருப்பதையும் கொடுத்து உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.கண்ணை இமை காப்பதுபோல தாயையும் தந்தையையும் பாதுகாப்பீர்கள். 

dimond

வசீகரமான தோற்றம், உயர்வாக வாழத் துடிப்பு, சுகபோகத்தை அனுபவிக்க விருப்பம்,தோல்வியைத் தாங்கமுடியாத பயம்,பாசமும் நேசமும் உள்ள பண்பு ஆகியவை இந்த நட்சத்திரத்துக்குரிய பொதுவான குணங்கள் ஆகும்.

தர்மம் செய்வதில் ஆர்வமுள்ளவராகவும், செல்வந்தர்களாகவும், அபிமானிகளாகவும், புகழ்பட வாழ்பவர்களாகவும், தாம்பூலப் பிரியர்களாகவும் நீங்கள் இருப்பீர்கள்.சுகபோகங்களுக்கும் கலைக்கும் உரிய கிரகமான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்தவர்கள் என்பதால் கலை துறையில் பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள்.

bharanaih

மனம் கவரும் சிரிப்பாலும் நல்ல குணத்தாலும் உங்கள் மேல் அனைவரும் பைத்தியமாகிவிடும்படி செய்துவிடுவீர்கள். மற்றவர்களை பெரிதும் ஈர்க்கும் தன்மை கொண்டவர் நீங்கள்.உள்ளுக்குள் கவலைகள் இருந்தாலும் வெளியே அதை காட்டிக்கொள்ளாமல் அமைதியாக திகழ்வீர்கள்.
 
சாஸ்திரங்களைச் சொல்பவனாகவும், மனோதைரியம் உள்ளவனாகவும், அனைத்து விஷயங்களையும் அறிந்தவனாகவும் திகழ்வீர்கள்.ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறந்துவிடுவீர்கள். சமயோஜித புத்தியை பயன்படுத்துவீர்கள்.

bharani

வாசனைத் திரவியங்களில் நாட்டம் உடையவர்களாகவும்,ஆடம்பர உடைகளை அதிகம் விரும்புபவர்களாகவும் இருப்பீர்கள்.புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு ஆகியவை உங்களுக்கு மிகவும் பிடித்த சுவைகள்ஆகும் .

வணிகவியல், பல், கண், காது ஆகிய மருத்துவத் துறைகளில் ஈடுபாடு இருக்கும். எந்தப் பிரச்னையையும் அடிமனதில் தேக்கி வைத்துக்கொள்ளாமல் சுலபமாக எடுத்துக்கொள்வீர்கள்.மலை, அருவி, பூங்காவைப் பார்த்தால் அதனுடன் ஒன்றிப்போவீர்கள்.

bharanikl

சக ஊழியர்களெல்லாம் உங்களைப் பின்பற்றும் அளவுக்கு முன்மாதிரியாக நடந்து கொள்வீர்கள்.பெரிய பதவியை எளிதாக அடையும் நீங்கள், உங்களுக்குக் கீழே இருப்பவர்களை விரட்டாமல் சாதுர்யமாக வேலை வாங்குவீர்கள்.

 மனைவி மக்களின் தேவையறிந்து நடந்து கொள்வீர்கள் உங்களுக்கு சொந்த வீடு சுலபமாக அமையும் வாகன வசதிக்கு ஒருபோதும் குறைவிருக்காது.

பரணி நட்சத்திரத்தின் காரகத்துவங்கள்:

கணம்      : மனித கணம்.
பறவை    : காக்கை.
மிருகம்    : ஆண் யானை.
மரம்         : பாலில்லாத நெல்லி.
மலர்         : கருங்குவளை
நாடி          : மத்திம நாடி.
அதிர்ஷ்ட தெய்வம்          : ஸ்ரீதுர்கையம்மன்.
அதிர்ஷ்ட எண்கள்           : 2, 6, 9.
அதிர்ஷ்ட நிறங்கள்         : ரோஸ், வெள்ளை.
அதிர்ஷ்ட திசை                : தென்கிழக்கு.
அதிர்ஷ்டக் கிழமைகள்  : செவ்வாய், வெள்ளி.
அதிர்ஷ்ட ரத்தினம்          : வைரம்.
அதிர்ஷ்ட உலோகம்        : வெள்ளி.

பரணி நட்சத்திரகாரர்கள் வணங்கவேண்டிய கோயில்கள்:

1.அழகர் கோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஅழகர் பெருமாளையும், ஸ்ரீசுதர்சன மூர்த்தியையும் உங்களது ஜென்ம நட்சத்திர நாட்களில் சென்று தரிசிப்பது உங்களுக்கு சகல நன்மைகளையும் அளிக்கும்.

2. ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வது வாழ்வில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.

3.திருப்போரூரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருகப் பெருமானையும், ஸ்ரீசிதம்பர சுவாமிகளையும் வணங்குவதும் மிகுந்த நன்மை பயக்கும்.