பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஏன் அமைக்கவில்லை… நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை

பயோமெட்ரிக் வருகைப்பதிவு ஏன் அமைக்கவில்லை… நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக் கல்வித்துறை

பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்கள், அலுவலர்களின் வருகைப் பதிவை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்கள், அலுவலர்களின் வருகைப் பதிவை பதிவு செய்யாத பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

school

தமிழ அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் வருகைப் பதிவை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எத்தனை மணிக்கு உள்ளே வந்தார்கள், வெளியே சென்றார்கள் என்ற தகவல் அனைத்தும் ஒருங்கிணைந்த அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது.

school

தமிழக அரசுப் பள்ளிகள் அனைத்திலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டை அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் பல பள்ளிகளில் இந்த பயோமெட்ரிக் ஏற்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 28ம் தேதிக்குள் வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறையில் செய்யாததற்கான காரணத்தை அவர்கள் கூற வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.