பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

 

பயிர்காப்பீடு வழங்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை: விவசாயிகள் ஆவேசம்..!

கடந்த ஆண்டு மழை இல்லாததால் பயிர்கள் வெயிலில் கருகி நாசமாகின. விளைச்சல் சரிவர இல்லாததால் விவசாய குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு மழை இல்லாததால் பயிர்கள் வெயிலில் கருகி நாசமாகின. விளைச்சல் சரிவர இல்லாததால் விவசாய குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இயற்கை சீற்றங்களாலோ அல்லது மழை இல்லாமல் பயிர்கள் வீணாகினாலோ விவாசியிகளுக்கு அரசு சார்பில், பயிர் காப்பீடு தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் காப்பீடு நிறுவனங்களிடம் பயிர் காப்பீடுத் தொகை கேட்டுள்ளனர். ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த தொகை அவர்களுக்கு கிடைக்க வில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

farmers

இந்நிலையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று புதுக்கோட்டையில் அம்மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற்றது. அதில் கடந்த ஆண்டின் பயிர்காப்பீட்டுத் தொகை இன்னும் கொடுக்கவில்லை என்று விவசாயிகள் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு, காப்பீட்டு நிறுவனங்களிடம் கேட்டு விரைவில் அந்த தொகையை அளிப்பதாக ஆட்சியர் உமா மகேஸ்வரி உறுதியளித்துள்ளார். 

Farmers

அதனை தொடர்ந்து விவசாயிகள், இந்த பயிர்காப்பீட்டு தொகை கிடைக்காமல் 18 ஆயிரம் விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளிக்கு முன் அந்த தொகையை கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று ஆட்சியரிடம் தங்களது மனக்குமுறல்களை தெரிவித்துள்ளனர்.