பயிரைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்!

 

பயிரைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வாலிபர்!

ஆங்காங்கே மின்வேலிகள் அமைக்கப்படுவதால் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.

மின்வேலி அமைப்பது சட்ட விரோதமானது என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இருப்பினும் ஆங்காங்கே மின்வேலிகள் அமைக்கப்படுவதால் உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன.குடியாத்தம் பகுதியில் பிச்சாண்டி என்னும் விவசாயி அவரது வயலில் மின்வேலி அமைத்திருந்த நிலையில்,  நேற்று அவ்வழியே சென்ற யானை அதனை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தது. அதே போல இன்று மீண்டும் ஒரு வாலிபர் உயிரிழந்துள்ளார். 

ttn

வேலூர் மாவட்டம்  பூமாலை பகுதியில் வசித்து வருபவர் மகாதேவன். இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் ஒன்று இருக்கிறது. அந்த நிலத்தில் அடிக்கடி வனவிலங்குகள் வந்து, பயிர்களை நாசம் செய்து வந்ததால் அதற்கு ஒரு முடிவு கட்ட மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த வழியாகச் சென்ற சந்தோஷ் என்ற வாலிபர் அதனை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் வந்து சந்தோஷின், குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். 

உடனே அங்கு  விரைந்து சென்ற போலீசார் சந்தோஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மின்வேலியை அமைத்த மகாதேவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.