பயப்பட வேண்டாம்; அது நாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான்

 

பயப்பட வேண்டாம்; அது நாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான்

சென்னை எழும்பூரில் பிடிபட்ட இறைச்சி நாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான் என ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

சென்னை: சென்னை எழும்பூரில் பிடிபட்ட இறைச்சி நாய்க்கறி இல்லை ஆட்டுக்கறிதான் என ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.

சென்னைக்கு ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ இறைச்சியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய காவல்துறையினர் கடந்த 17-ம் தேதி பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சியில் வால் நீளமாக இருந்ததால் அது நாய் இறைச்சியாக இருக்கலாம் என்ற புகார் எழுந்தது. எனவே, சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் இறைச்சியை கைப்பற்றியதுடன், இறைச்சி மாதிரியை ஆய்வுக்கும் அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். நாய்க்கறி பீதி காரணமாக பிரியாணி கடைகளில் விற்பனையும் சரிந்தது. 

இந்நிலையில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எழும்பூரில் கைப்பற்றப்பட்ட இறைச்சி நாய்க்கறி அல்ல, ஆட்டுக்கறிதான் என உறுதி ஆனது. அது சிறிய வகை ஆடு எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.