பயப்படாதீங்க! நம்புங்க பணம் பத்திரமாக இருக்கும்! வங்கிகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு- ரிசர்வ் வங்கி வேண்டுகோள்

 

பயப்படாதீங்க! நம்புங்க பணம் பத்திரமாக இருக்கும்! வங்கிகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு- ரிசர்வ் வங்கி வேண்டுகோள்

வதந்திகளை பார்த்து பயப்படாதீங்க. இந்திய வங்கி அமைப்பு பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளதாக பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.

பஞ்சாப் அண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் கடன் விவகாரம் தற்போது தோண்ட தோண்ட பெரிதாகி கொண்டே போகிறது. டெல்லி காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு லட்சுமி விலாஸ் வங்கி இயக்குனர்கள் மீது கிரிமினல் குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்த வங்கியை உடனடி திருத்த நடவடிக்கை வரைமுறைக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது.

லட்சுமி விலாஸ் வங்கி கிளை

இது போன்ற வங்கிகள் தொடர்பான செய்திகளை தொடர்புபடுத்தி வங்கிகள் நிலவரம் மோசமாக இருப்பதாகவும், இழுத்து மூடப்பட உள்ளதாகவும் சில சமூக விரோதிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் பணத்தை டெபாசிட் செய்தவர்கள் கலக்கம் அடைந்தனர். வங்கியில் போட்ட பணம் திரும்ப கிடைக்குமா என்ற சந்தேகம் வங்கி வாடிக்கையாளர்களிடம் அச்சம் எழுந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

இந்நிலையில் பொதுமக்களின் அச்சத்தை போக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி டிவிட்டரில் செய்தி ஒன்றை பதிவு செய்தது. அதில், கூட்டுறவு வங்கிகள் உள்பட வங்கிகள் தொடர்பான வதந்திகள் சில இடங்களில் உள்ளன. இதனால் டெபாசிட்தாரர்களுக்கு மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற வதந்திகளை நம்பி பயப்பட வேண்டிய அவசியமில்லை, இந்திய வங்கி அமைப்பு பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி உறுதியளிக்க விரும்புகிறது என பதிவு செய்துள்ளது.