பயன்படுத்தாம சும்மா வெச்சிருந்து ரூ.10 கோடி தண்டம் அழுத தமிழக அரசு?! விரயமாகும் மக்கள் பணம்!

பயன்படுத்தாம சும்மா வெச்சிருந்து ரூ.10 கோடி தண்டம் அழுத தமிழக அரசு?! விரயமாகும் மக்கள் பணம்!

தமிழகத்தில் வழக்கமாக எப்போதுமே ‘வரவு எட்டணா… செலவு பத்து அணா’ என்று பட்ஜெட் தாக்கல் செய்யும் பொழுது நிதியமைச்சர்கள் சிரித்துக் கொண்டே சொல்வார்கள். சுண்டக்காய் கால் பணம்… சுமைகூலி முக்கால் பணமாக தமிழகத்தில் அதிகாரிகள் வேலை செய்து வரும் நிலையில், ஒவ்வொரு துறைகளிலுமே மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் விரயமாகி வரும் போக்கு தற்போது தமிழகத்தில் நிலவி வருவது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

walkie talkie

உதாரணத்திற்கு தமிழக காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக, தகவல் தொழில்நுட்ப தளவாடங்களை வாங்குவதற்கு 2017ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அதற்கான டெண்டர் பணிகளே முடிவடையாத நிலையில், இந்த மூன்றாண்டுகளில், அவற்றைப் பயன்படுத்துவதற்கு அலைக்கற்றை கட்டணமாக இதுவரையில் சுமார் 10 கோடி ரூபாய் வரையில் தமிழக அரசு செலுத்தியிருக்கும் தகவல் வெளியாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு, தமிழக காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக வயர்லஸ் கருவிகள், சிசிடிவி-க்கள் போன்ற தகவல் தொழில்நுட்ப தளவாடங்கள் வாங்குவதற்காக சுமார் 86 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதே போல தமிழகத்தின் 10 மாவட்டங்களில் டிஜிட்டல் மொபைல் ரேடியோ வாங்குவதற்காக சுமார் 57 கோடியே 49 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டங்களில் முறைக்கேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

cctv

இந்த விசாரணையில், தவறுகள் நடந்துள்ளதாக  தமிழக காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது. 3 ஆண்டுகளாகியும் இந்த பணிகள் முடியவில்லை என்றும் தமிழக காவல்துறை அறிக்கை கொடுத்துள்ளது. இந்நிலையில், எந்த பணிகளும் முடிவடையாமல், கருவிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இவற்றை பயன்படுத்தியதற்காக அலைக்கற்றை கட்டணமாக வருஷத்திற்கு ரூ.3 கோடியோ 30 லட்சம் என மூன்று வருடங்களுக்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து செலுத்தி வந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.