பயனர்களுக்கு மிகவும் உதவும் புதிய வசதி ஸ்கைப் செயலியில் அறிமுகம்

 

பயனர்களுக்கு மிகவும் உதவும் புதிய வசதி ஸ்கைப் செயலியில் அறிமுகம்

நியூயார்க்: ஸ்கைப் செயலியில் பயனர்களுக்கு மிகவும் உதவக் கூடிய புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஸ்கைப் செயலியில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை ஸ்கைப் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்நிலையில், பயனர்களுக்கு மிகவும் உதவக் கூடிய மற்றொரு புதிய வசதி ஸ்கைப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் புதிய வசதி ஸ்கைப் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.