பயனர்களிடம் அத்துமீறிய பேஸ்புக்! கடந்த ஆண்டு லாபத்தை அபராதமாக தூக்கிக்கொடுத்த பரிதாபம்… 

பயனர்களிடம் அத்துமீறிய பேஸ்புக்! கடந்த ஆண்டு லாபத்தை அபராதமாக தூக்கிக்கொடுத்த பரிதாபம்… 

உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று பேஸ்புக். அண்மை காலமாக பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடிவருவதாக அந்நிறுவனம் மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது. 

உலக அளவில் மிகவும் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்று பேஸ்புக். அண்மை காலமாக பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடிவருவதாக அந்நிறுவனம் மீது புகார் எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவு திரட்ட செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு பேஸ்புக் பயனாளர்களின் விவரங்களை சட்டவிரோதமாக திருடி கொடுத்ததாக பேஸ்புக் மீது புகார் எழுந்தது. இதனை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்தும் பேஸ்புக் மீது தொடர் புகார்கள் வந்துகொண்டிருந்தன.  இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணையை தொடங்கியது.

இந்நிலையில் பயனாளர்களின் விவரங்கள் திருடிய விவகாரத்தில் அந்நிறுவனத்துக்கு  34 ஆயிரத்து 240 கோடி ரூபாய் அபராதம் அமெரிக்க கூட்டமைப்பு வர்த்தக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதம் பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9 சதவீதமாகும்.