பயந்தது நடக்கிறது… மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை?

 

பயந்தது நடக்கிறது… மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை?

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அதிக இடங்களை வென்ற பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், அதை பாரதிய ஜனதா நிராகரித்தது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அதிக இடங்களை வென்ற பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், அதை பாரதிய ஜனதா நிராகரித்தது. அதை அடுத்து சிவசேனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூடுதல் அவகாசம் வேண்டும் என்று சிவசேனா விடுத்த கோரிக்கையை ஆளுநர் நிரகாரித்து தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைத்தார்.

shiv sena and modi

இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றதுமே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர மறைமுக முயற்சிகள் நடந்தன. அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவந்துவிட முயற்சிகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. 
இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டார். அவர் புறப்படுவதற்கு முன்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தரவு விரைவில் வெளி வரும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.