பயணிகளைத் தாக்கிய கல்லடா பேருந்தின் உரிமம் ஒரு வருடத்துக்கு ரத்து!

 

பயணிகளைத் தாக்கிய கல்லடா பேருந்தின் உரிமம் ஒரு வருடத்துக்கு ரத்து!

விசாரணை முடிவில் கல்லடா பேருந்தின்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், மேற்படி பேருந்துக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளைத் தாக்கியது, அதிவேகத்தில் பேருந்தை இயக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 14 வழக்குகள் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து சேலம் செல்வதற்காக கல்லடா குழுமங்களின் பேருந்து ஒன்றில் பயணம் செய்த பயணிகள் மூவரை அப்பேருந்து ஊழியர்கள் அடித்து, கீழே இறக்கிவிட்டுச் சென்ற சம்பவம் குறித்த செய்தியை ஏற்கெனவே பதிவுசெய்திருந்தோம். மேற்படி சம்பவம் குறித்த விசாரணையைத் துவக்கிய திருச்சூர் சாலைப் போக்குவரத்து கழக அதிகாரிகள், சம்பவம் நடந்தது உண்மை என்பதையும், பயணிகள் மூவரை பேருந்து பணியாளர்கள் ஏழு பேர் தாக்கியதும், அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட பேருந்து வேகமாக இயக்கப்பட்டதும் என பல்வேறு சட்டமீறல்கள் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Kallada

விசாரணை முடிவில் கல்லடா பேருந்தின்மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், மேற்படி பேருந்துக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளைத் தாக்கியது, அதிவேகத்தில் பேருந்தை இயக்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 14 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதே கல்லடா பேருந்து நிறுவனத்தில் பெண் பயணி ஒருவர் நடு இரவில் பாதி வழியில் இறக்கிவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் கல்லடா பேருந்து நிறுவனத்தின் உரிமையாளர் விசாரணைக்கு ஆளானதும் குறிப்பிடத்தக்கது.