பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி 5,300 விண்ணப்பிங்கள் வந்துள்ளன… அவற்றில் 25க்கு மட்டுமே அனுமதி: காவல்துறை

 

பயணம் மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி 5,300 விண்ணப்பிங்கள் வந்துள்ளன… அவற்றில் 25க்கு மட்டுமே அனுமதி: காவல்துறை

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசர தேவைக்காக பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி 5 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 25 மட்டுமே அனுமதிக்க தகுதியானவையாக கருதமுடிந்ததாக என சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், திடீரென அவசரப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தின் தரை தளத்தில் தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 

bus

இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை ஆகியவற்றுக்கு சென்னைக்குள்ளோ, தமிழகத்துக்குள்ளோ அல்லது வெளி மாநிலத்துக்கோ பயணிப்போா் இந்த கட்டுப்பாட்டு அறையை 75300 01100 என்ற மொபைல் எண்ணில் வாட்ஸ் ஆஃப் மூலமாகவும், gcpcorona2020@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் தொடா்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.  அனுமதிச்சீட்டு கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையா் ஜெயலட்சுமி தலைமையிலான 25 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குடும்பத்தினர் திருமணம் அல்லது இறப்பு ஆகிவற்றிற்கும், மருத்துவ உதவிக்கான அத்தியாவசிய உதவியை நாடுபவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எந்த ஊருக்கு செல்கிறார்களோ அங்குள்ள காவல் நிலையைத்தை 5 நிமிடத்திற்குள் தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்ய வேண்டுமென்றும் அறிவுறுத்தியுள்ளனர். 

police

இந்நிலையில் பயண அனுமதி கோரி இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 300 விண்ணப்பங்கள் மட்டுமே அனுமதிக்க தகுதியானவையாக இருப்பதாக துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.விண்ணப்பம் செய்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு, அவர்கள் செல்கின்ற ஊரில் உள்ள காவல் நிலையைத்தை 5 நிமிடத்திற்குள் தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவ்வாறு பயணம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்தாலும், பயணிக்க போதுமான இடவசதி உள்ளதா என்றும், கொரோனா தொற்று இல்லாமல் இருக்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்த பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.