பப்ளிசிட்டிக்கு கறிவிருந்து நடத்திய இளைஞர்கள்… 9 பேரை ஜெயிலில் தள்ளிய போலீஸ்!

பப்ளிசிட்டிக்கு கறிவிருந்து நடத்திய இளைஞர்கள்… 9 பேரை ஜெயிலில் தள்ளிய போலீஸ்!

நாடு முழுக்க ஊரடங்கு உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் கறி விருந்து நடத்தி போலீசில் மாட்டுவது தொடர்கதையாக உள்ளது. தொலைக்காட்சிகளில் கறிவிருந்து பற்றிய செய்தி, படம் வருவதால் பலரும் ஆங்காங்கே கறிவிருந்து நிகழ்ச்சியை நடத்தி வேண்டுமேன்றெ சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்கதையாகி உள்ளது.

பப்ளிசிட்டிக்காக கறிவிருந்து நடத்திய ஒன்பது பேரை திருவள்ளூர் போலீசார் சிறையில் அடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுக்க ஊரடங்கு உள்ள நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இளைஞர்கள் கறி விருந்து நடத்தி போலீசில் மாட்டுவது தொடர்கதையாக உள்ளது. தொலைக்காட்சிகளில் கறிவிருந்து பற்றிய செய்தி, படம் வருவதால் பலரும் ஆங்காங்கே கறிவிருந்து நிகழ்ச்சியை நடத்தி வேண்டுமேன்றெ சமூக ஊடகங்களில் பகிர்வது தொடர்கதையாகி உள்ளது.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் கறிவிருந்து கொண்டாடி அதை சமூக ஊடகத்தில் பதிவிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கன்னிகுளம் பகுதியில் ஊரடங்கை மீறி இளைஞர்கள் ஒன்று கூடி சமபந்தி போஜனம் நடத்தினர். அதை வீடியொவாக எடுத்து பந்தாவாக பதிவிட்டுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்த போலீசார் கிராமத்துக்கு வந்து ஒன்பது பேரை அள்ளிச் சென்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களையும் தேடி வருகின்றனர்.
பந்தாவுக்காக கறிவிருந்து கொண்டாடினோம். இனி இப்படி செய்ய மாட்டோம் என்று போலீசில் சிக்கியவர்கள் கண்ணீருடன் கூறி வருகின்றனர். விசாரித்ததில் அனைவரும் படித்த இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.