பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் | சிவகாசியிலிருந்து நெடும்பயணம் சாத்தியமானது எப்படி?

 

பப்புவா நியூ கினியின் மத்திய அமைச்சரான தமிழர் | சிவகாசியிலிருந்து நெடும்பயணம் சாத்தியமானது எப்படி?

நியூ கினி என்பது உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். 7,86,000 கிமீ நிலப்பரப்பு கொண்ட இந்த தீவு, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்துக்கும்  இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்திருக்கிறது. 

நியூ கினி என்பது உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். 7,86,000 கிமீ நிலப்பரப்பு கொண்ட இந்த தீவு, பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்துக்கும்  இடைப்பட்ட நீர்ப்பரப்பில் அமைந்திருக்கிறது. 

susitharan muthuvelu

இந்த பப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட சிவகாசியைச் சேர்ந்த சசீந்திரன் முத்துவேல் பதவியேற்றுள்ளார். இந்த பதவியை ஏற்கும் சசீந்திரன், முதல் தமிழர் மட்டுமல்ல… முதல் இந்தியரும் இவர் தான்.  மத்திய அமைச்சராக ஜூன் 7ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்புவரை, சசீந்திரன் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராகவும் ஆறாண்டுகளாக பதவி வகித்தார். 

இந்தி கற்றால், இந்தியா  முழுவதுமே வேலைக்குச் செல்லலாம் என்று பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், தமிழ் வழியில் பள்ளிக் கல்வியை முடித்த சசீந்திரன், இன்று தமிழர்களுக்கு கொஞ்சமும் பரீட்சயமற்ற நாட்டின் மத்திய அமைச்சராக உயர்ந்துள்ளது போற்றத்தக்கது.

susitharan muthuvelu

சிவகாசியில் அச்சு தொழிலை செய்து வந்த குடும்பத்தில் பிறந்த சசீந்திரன், 10ஆம் வகுப்புவரை தமிழ்வழிக் கல்வியில் பயின்றார். பிறகு, தனக்கு கிடைத்த உதவித் தொகையை பயன்படுத்தி ஆங்கில வழியில் மேல்நிலை கல்வியை முடித்தார். அதன் பிறகு சிவகாசிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விவசாயத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயின்றார்.  விவசாயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காததால் மலேசியாவுக்கு சென்று இரண்டாண்டுகள் பல்பொருள் அங்காடி ஒன்றில் மேலாளராக பணியாற்றினார் சசீந்திரன்.  அப்போது, பப்புவா நியூ கினி நாட்டில் வேலைவாய்ப்பு இருப்பதாக நண்பர்கள் தெரிவித்ததையடுத்து, 1999இல் அந்நாட்டிலுள்ள நியூ வெஸ்ட் பிரிட்டன் எனும் மாகாணத்திற்கு சென்றதாக கூறுகிறார். 

susitharan muthuvelu

இந்தியாவை போன்று பப்புவா நியூ கினியில் மாகாணத்தின் ஆளுநரை மத்திய அரசு நியமிப்பதில்லை. தங்களது ஆளுநரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். அந்த வகையில், நியூகினி  மக்களே இவரை ஆளுநராக தேர்ந்தெடுக்கும் அளவிற்கு அந்த மக்களின் இதயங்களில் இடம் பிடித்துள்ள சசீந்திரன் இன்று மத்திய அமைச்சராகவும் சாதித்திருக்கிறார்.