பப்ஜி விளையாட தடை: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

 

பப்ஜி விளையாட தடை: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவன்!

பப்ஜி விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்,10ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பப்ஜி விளையாட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால்,10ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரியாவை சேர்ந்த விடியோ கேம் நிறுவனம் புளுஹோல். இந்த நிறுவனம் தற்போது பிளேயர் அன்நோன் பாட்டில் கிரவுண்ட்ஸ்(pubg) என்னும் விடியோ விளையாட்டை அறிமுகப்படுத்தியது.  சுருக்கமாக ‘பப்ஜி’ என அழைக்கப்படும் இந்த விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது.

pubg

இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் அதனால் அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

pubg

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள மல்கஜ்கிரி பகுதியை சேர்ந்தவர் கள்ளக்குறி சாம்பசிவா. இவர் கடந்த திங்கள்கிழமை அன்று ஆண்டு இறுதி தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ளாமல் செல்போனில் பப்ஜி விளையாடி வந்துள்ளார். அதற்காக பெற்றோர் கண்டிதையடுத்து அழுதபடி அறைக்குள் சென்ற சம்பசிவா மனவேதனை தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

pubg

முன்னதாக பப்ஜி கேம் விளையாட மொபைல் வாங்கித் தராததால் இளைஞர் ஒருவர் மும்பையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: ‘பப்ஜி’ விடியோ கேமை தடை செய்யக் கோரும் 11 வயது சிறுவன்